ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா
ADDED :1748 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஐயப்ப சேவா சமிதி சார்பில், மண்டல மகோத்சவ விழா நடை பெறுகின்றன.
ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று திருவிளக்கு வழிபாடும், அதைத்தொடர்ந்து, சர்ப்ப சாந்தி பூஜையும் நடந்தன. 3 ஆம் தேதி ஐயப்ப சேவா சமிதியின், 61 ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் வாராஹி மந்திராலயம் மணிகண்ட சுவாமி பங்கேற்று ஆசியுரை வழங்கினார். சேலம் சுப்ரமணியம் குழுவினர், கல்கத்தா காளி, சிவன், விஷ்ணு, வெங்கடாசலபதி, பிரம்மா, முருகன், விநாயகர் ஆகிய சுவாமி உருவ சிலைகளை செய்து, ஐயப்பன் கோவிலில் வைத்துள்ளனர். அதற்கு தினமும் காலை மாலையில், பூஜைகள் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை சேவா சமிதி சங்க தலைவர் அச்சுதன் குட்டி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.