உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!


கையில் பணம் தங்கவில்லையா? கடன் தொல்லையா? பிரச்னை தீர இந்த பரிகாரங்களில் ஒன்றைச் செய்யுங்கள்.  
* 12 வாரம் வெள்ளிக்கிழமை மாலையில் மகாலட்சுமிக்கு மல்லிகைப்பூ சாத்தி வழிபடுங்கள்.
* வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தன்று காஞ்சி காமாட்சிக்கு விளக்கேற்றுங்கள்.
* தினமும் காலை நீராடி பறவைகளுக்கு அரிசி அல்லது இனிப்பு வழங்குங்கள்.  
* வாசலில் சிறிது சர்க்கரையைத் துாவி எறும்புக்கு உணவிடுங்கள்.
* தினமும் மாலையில் விளக்கேற்றி லட்சுமி ஸ்லோகத்தை மூன்று முறை ஜபியுங்கள்.
‘‘அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம்
ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்!
ஸர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம்
ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம் ஸர்வ ெஸளபாக்ய ஸித்தயே’’
குதிரையின் மீதிருக்கும் மகாலட்சுமியே! இரு கண்கள், நான்கு கைகள் கொண்டவளே! தங்கம் போல் பிரகாசிக்கும் உடலை பெற்றவளே! அலைமகளே! செல்வம் தரும் ஐஸ்வர்ய லட்சுமியே! எங்களுக்கு சகல சவுபாக்கியம் அருள்வாயாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !