உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு கோடி

திருச்செந்துர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு கோடி

திருச்செந்தூர் : திருச்செந்துர் சுப்பிரமணியசுவாமி கோயில் மே மாத உண்டியல் காணிக்கை ரூ. ஒரு கோடியை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை உண்டியல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த மே மாதமும் கடந்த 15 மற்றும் 29ம் தேதிகளில் கோயில் உண்டியல், கோசாலை உண்டியல், அன்னதான உண்டியல், மேலக்கோயில் அன்னதான உண்டியல், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியல் ஆகியவை மூலம் ரூ.ஒரு கோடியே 21 லட்சத்து 12 தொள்ளாயிரத்து தொண்ணுற்று நான்கு ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலு ம் ஒரு கிலோ எழுநூற்று எண்பெத்தெட்டு கிராம் தங்கமும், 9 கிலோ தொள்ளாயிரத்து முப்பதொன்று கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது. இது கடந்த மாதத்தை விட அதிகமான வருவாயாகும். இந்த உண்டியல் எண்ணிக்கையின் போது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர் செல்லத்துரை, தூத்துக்குடி இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் வீரராஜன், கண்காணிப்பாளர்கள் ராமசாமி, ரோஷிணி, பொதுமக்கள் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், வேலாண்டி, வங்கி பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !