உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் பெருமாள் கோயிலில் 2ல் நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம்

நெல்லை டவுன் பெருமாள் கோயிலில் 2ல் நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம்

திருநெல்வேலி : நெல்லை டவுன் மேல மாடவீதி லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் வரும் 2ம்தேதி நடக்கிறது. கோயிலில் 2ம்தேதி காலை 7 மணி முதல் பஞ்சசூக்த ஹோமம், தொடர்ந்து மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம், அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி, தீர்த்த வினியோகம் நடக்கிறது. மாலை 5 மணி முதல் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு "ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் வைகானஸ ஆகம முறைப்படி நடக்கிறது. ஆகம விற்பன்னர் திருக்குறுங்குடி திருமலை நம்பி சந்நிதி பரம்பரை அர்ச்சகர் கோவிந்தன் பட்டாச்சாரியர் தலைமையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதி, திருக்குறுங்குடி பரம்பரை அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியர் உள்ளிட்ட குழுவினர் உற்சவத்தை நடத்துகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், முரளி பட்டாச்சாரியர், ராஜா பட்டாச்சாரியர், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !