உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குள்ளப்புரம் கௌமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

குள்ளப்புரம் கௌமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

தேவதானப்பட்டி:குள்ளப்புரம் ஈசநாட்டுக்கள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான கௌமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.தேனிமாவட்டம், பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம் கிராமம் ஈசநாட்டுக்கள்ளர் சமுதாயத்துக்கு சொந்தமான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடக்கிறது. நிதி அமைச்சர் பன்னீர் செல்வம், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, எஸ்.பி., பிரவீண்குமார் அபினபு, டி.எஸ்.பி., உமா, பெரியகுளம் ஒன்றிய குழு தலைவர் செல்லமுத்து, தொழிலதிபர் அமரேசன் உட்பல பலர் பங்கேற்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை அனுஞ்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரணம், சுங்குரன்ப்பணம், கும்பலங்காரம், முதற்கால யாகபூஜை தீபாராதனை நடந்தது. குள்ளப்புரம் ஈசநாட்டு கள்ளர் சமுதாய பொறுப்பாளர்கள் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !