எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை
\* உலகில் எல்லாம் தெரிந்தவரோ, எதுவும் தெரியாதவரோ யாருமில்லை.
* இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் நலமாக வாழலாம்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.
* கரையான் போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழ்வது கூடாது.
* அறிவு தரும் நல்ல நுால்களை படிக்காமல் இருப்பது பெரும்பிழை.
* புத்தகத்தால் பெறும் அறிவை விட அனுபவ அறிவு மேலானது.
* பதறாத காரியம் சிதறாது. எந்தப் பணியிலும் நிதானமாக ஈடுபடுங்கள்.
* ஆடம்பரமும் அலட்சிய எண்ணமும் கீழ்நிலைக்கு தள்ளி விடும்.
* நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றும் நேரத்திற்குள் மறைந்து விடும்.
* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் வெட்கமாக இருக்கும்.
* எந்த விஷயத்திலும் விளைவை சிந்தித்த பின் செயலாற்றுங்கள்.
* அன்பு, அறிவு வெளியில் தெரியாது. அவற்றை உணர மட்டுமே முடியும்.
* துன்ப நேரத்தில் தான் உறவினர், நண்பர்களின் இயல்பை அறியலாம்.
* குடும்ப விஷயத்தை பிறரிடம் சொல்பவன் வீட்டுக்கு விரோதி.