உலக நன்மை வேண்டி மீனவ பெண்கள் வழிபாடு
ADDED :1843 days ago
காரைக்கால் : காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் உலக நன்மை வேண்டி, மீனவ பெண்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.
உலக நன்மை, இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து, சித்தி விநாயகர் ரேணுகா தேவி, பால ஆஞ்சநேயர் கோவிலுக்கு பால்குடம் சுமந்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.