உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை உச்சி பெருமாள் கோவில் கோபுரத்துக்கு வண்ணம்

மலை உச்சி பெருமாள் கோவில் கோபுரத்துக்கு வண்ணம்

சங்ககிரி: சங்ககிரி மலை உச்சியில், சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, புரட்டாசிதோறும் நடக்கும் வழிபாட்டுக்கு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்த கோவில் கோபுரத்துக்கு வண்ணம் பூச, பக்தர்கள், தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், தொல்லியல் துறை சார்பில், கோபுரத்துக்கு, நேற்று முன்தினம் வண்ணம் பூசப்பட்டது. இதனால், தொல்லியல் துறையினருக்கு, பக்தர்கள், நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !