உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று தேய்பிறை அஷ்டமி விரதம்; பைரவரை வழிபட்டு அன்னதானம் செய்ய கடன் அனைத்தும் தீரும்!

இன்று தேய்பிறை அஷ்டமி விரதம்; பைரவரை வழிபட்டு அன்னதானம் செய்ய கடன் அனைத்தும் தீரும்!

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை வரும் இந்த தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட கஷ்டம், கடன் தொல்லை அனைத்தும் தீரும்.


இன்று தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.  காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று ராகுவேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) வழிபடுவர். எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்க இவரை வழிபடுவர். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள். பைரவரும் கரியவரே. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்டபைரவராக 8 பைரவசந்நிதிகள் உண்டு. தேய்பிறை அஷ்டமி மட்டுமல்ல, ஞாயிறு ராகு காலத்திலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. இன்று பைரவரை வணங்கி  செய்யும் அன்னதானம் முன்று மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !