தஞ்சையில் சாரதாதேவியார் ஜெயந்தி விழா
ADDED :1748 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் அன்னை சாரதாதேவியாரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மங்கள ஆரதி, வேத பாராயணம், நாமசங்கீர்த்தனம், சிறப்பு பஜன் நடந்தது. உலக வாழ்க்கையில் பற்று குறைய குறைய ஒருவர் மனஅமைதி பெறுகிறார். ஒருவர் வார்த்தையாலும் பிறரை துன்புறுத்த கூடாது. வாழ்வில் துன்பங்கள் ஏற்படுகின்றன. அவை நிலைத்திருக்காது. ஓடும் நீரை போன்று ஓடி மறைந்து விடும் என சாரதாதேவியார் கூறியுள்ளார்.