காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1750 days ago
கிருஷ்ணகிரி: கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.