ஸ்வர்ணாகர்ஷணா பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1751 days ago
உடுமலை : உடுமலை ஆதிசக்தி விநாயகர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலையில், வடக்கு குட்டை வீதியில், ஆதிசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, தம்பதி சமேதரராக உள்ள ஸ்வர்ணாகர்ஷணா பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர் உட்பட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள், சமூக இடைவெளிவிட்டு, வழிபட்டு சென்றனர்.