பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :4993 days ago
விழுப்புரம் : விழுப்புரம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 26ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெருமாள் அம்ச வாகனம், சிம்ம வாகனம் மற்றும் அனுமந்த வாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று 5ம் நாள் விழா நடந்தது. இதில் பெருமாள் சேஷ வாகன திருப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.