கோ மாதா ஆலயத்தில் ஆராதனை விழா
ADDED :1769 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம்கோமாதா ஆலயத்தில் காஞ் சி காமகோடி பீடாதிபதி சந்திர கரேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. காஞ் சி காமகோடி பீடாதிபதி சந்திர கரேந்திரசுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கருவடிக்குப்பம் வேதாஸ்ரமம் குருகுலம் கோமாதா ஆலயத்தில் நேற்று காலை கோ பூஜை , அஸ்வ பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து புருஷசூத்தேஹாமம் மற்றும் பஜனை, மகாபெரியவர் ஆராதனை விழா கெம்ப்பாப் சீனுவாசபாகவதர் தலைமையில் நடந்தது.