உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் கூடாரவல்லி திருநாள் விழா

காரமடையில் கூடாரவல்லி திருநாள் விழா

மேட்டுப்பாளையம்: காரமடையில் மார்கழி மாத, 27ஆம் நாளில் கூடாரவல்லி என்னும் திருநாள் கொண்டாடப்பட்டது. அதிகாலை,3:00 மணிக்கு தாச பலஞ்சிக மகாஜன திருப்பாவை கமிட்டியினர், நான்கு ரத வீதிகளில், ஆண்டாளின் பாசுரமான கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பஜனை பாடலை பாடி வந்தனர். மேலும் நான்கு ரத வீதிகளில் மார்கழி மாதம் முழுவதும், திருவிளக்கு வைத்து, வழிபாடு செய்யும், பெண்கள், குழந்தைகளுக்கு, பரிசுப் பொருட்கள் பிரசாதங்கள் வழங்கினர். பஜனைக் குழு தலைவர் கோவிந்தன் கூறுகையில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக, பஜனை குழுவினர் காரமடை அரங்கநாதர் கோவிலுக்குள், பஜனை பாடி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு, அறநிலைத்துறை அனுமதி அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளிலாவது, கோவிலுக்குள் பஜனை பாடலை பாட, கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !