கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்
ADDED :1727 days ago
மும்பை: மஹாராஷ்டிராவில் விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் விநாயகரை தரிசித்து விட்டு வெளியே வரும் போது நுழைவு வாசலில் அமர்ந்து கொண்டு நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், சிலரிடம் கை குலுக்குவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அருண் லிமாடியா என்பவர் மொபைலில் வீடியோவாக படம் எடுத்து முகநூலில் பதிவேற்றினார். அதன் வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.