உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் மகரவிளக்கு தரிசனம்

பரமக்குடியில் மகரவிளக்கு தரிசனம்

 பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் ஐயப்பன் கோயில்களில் தை மாத மகரவிளக்கு தரிசன விழா நடந்தது.தரைப்பாலம் அருகில்உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாலை 6:45 மணிக்கு மகரவிளக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.எமனேஸ்வரம் வண்டியூரில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயிலில் 15ம் ஆண்டு மகரஜோதி விழா நடந்தது. அன்று காலை 9:00 மணி முதல் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மாலை 6:40 மணிக்கு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்ஸவர் சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்தார். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகர ஜோதி தரிசனத்தில் கலந்து கொண்டனர். ஐந்துமுனை பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலிலும் மகரஜோதி தரிசன சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !