சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1723 days ago
அன்னூர்: அச்சம்பாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அச்சம்பாளையம், திருவள்ளுவர் நகரில், சக்தி விநாயகர் மற்றும் பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில், புதிதாக விமான கோபுரம் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. நேற்று கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு முதல் கால யாக பூஜையும், வேதபாராயணமும் நடந்தது. நேற்று, அதிகாலையில், திருமுறை விண்ணப்பமும், காலை 9:30 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், விநாயகர் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கும், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.