நிரந்தர இருப்பிடம்
ADDED :1753 days ago
மரணப்படுக்கையில் இருந்த சாமுவேல் பவுல் என்னும் போதகரை உதவியாளர் ஒருவர் கவனித்து வந்தார். அவரிடம் சாமுவேல், ‘‘என் வீட்டின் கூரையை பாருங்கள். எங்கும் ஓட்டையாக இருக்கிறது! இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில் நான் செல்லும் பரலோக சாம்ராஜ்யத்தில் மாளிகை தயாராக இருக்கிறது. அதுவே என் நிரந்தர இருப்பிடம்” என்று சொல்லி உயிர் விட்டார். இவர் சொல்வதே உண்மை. இதை உணராமல் உலகத்தின் மீது கண்மூடித்தனமான ஆசை வைத்து மீள முடியாமல் அல்லல்படுகிறோம்.
“நீங்களும் நானும் மோட்சம் செல்லும் பிரயாணிகள். நமக்கான குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது. கண்களை இந்த உலகத்தின் மீது பதிக்காமல் நித்திய ராஜ்யத்தை நோக்கி செலுத்துவோம்”