எதிர்க்கேள்வி கேட்டவர்
ADDED :1748 days ago
ஒரு சொற்பொழிவாளர் மேடையில் ஆண்டவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் பேச்சில் இலக்கணப்பிழைகள் அதிகம் இருப்பதை உணர்ந்தார். ஆனாலும் பேச்சு நன்றாக இருந்ததால் மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். ஒரு கட்டத்தில் சொற்பொழிவாளர் மீது கோபப்பட்டு எழுந்த பேராசிரியர். ‘‘நீர் பேசுவதில் இலக்கணம் சரியில்லை. அதனால் பேசுவது கூடாது” எனக் கத்தினார்
“ஐயா! தங்களின் குற்றச்சாட்டை ஏற்கிறேன். எனக்கு இலக்கணம் தெரியாது தான். ஆனாலும் ஆண்டவரைப் பற்றி பேசுகிறேன். உங்களைப் போன்ற படித்தவர்கள் பங்கேற்காததால் தானே என்னைப் போன்றவர்கள் மேடை ஏற வேண்டிய நிலை வந்தது?” என எதிர்கேள்வி கேட்டார். .
பேராசிரியர் வாயடைத்துப் போனார். “பிறர் கண்ணிலுள்ள துாசியைப் பாராதே, உன் கண்ணிலுள்ள
உத்தரத்தைப் பார்” என்கிறது பைபிள்.