தங்கச்சி பசு
                              ADDED :1746 days ago 
                            
                          
                           
 அம்பாளுக்கு ‘கோமாதா’ என்ற பெயர் லலிதா சகஸ்ர நாமத்தில் உள்ளது.  பராசக்தியே பசு வடிவில் வந்ததாக சில கோயில்களில் குறிப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்மனின் பெயரே ‘கோ’மதி அல்லது ‘ஆ’வுடை என உள்ளது. ‘கோ’ என்றாலும், ‘ஆ’ என்றாலும் ‘பசு’ என்று பொருள். பார்வதியின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.