பெண்கள், சமூக சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்
ADDED :1734 days ago
பால் கொடுக்கும் காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு உணவு அளிப்பர். வயதாகி பால் வற்றிய பின் உணவளிக்காமல் விட்டு விடுவது பாவம். பெண்கள் நினைத்தால் சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். இதனை வீடு வீடாக சேகரிக்கும் பணியில் சேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கிருஷ்ணரின் அருள் கிடைக்கும் என காஞ்சி மகாபெரியவர் கூறுகிறார்.