எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர் திருவிழா
உளுந்தூர்பேட்டை : எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர் திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் நூற்றாண்டு விழா கண்ட பெருமை கொண்டது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த 21ம் தேதி மாலை 6.45 மணிக்கு ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலை 4.30 மணிக்கு பிரார்த்தனையும், மாலை 6 மணிக்கு தேர் வீதியுலாவும் நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து தேர் வீதியுலா புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து நேற்று காலை 9 மணிக்கு ஆலயத்தை அடைந்தது. ஏராளமான மக்கள் தேர் திருவிழாவில் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி டி.ஐ.ஜி., சண்முகவேல், எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் ஐந்து டி.எஸ்.பி., க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.