பஞ்சபூதங்களுக்கு படையல்
ADDED :1719 days ago
மதுரை : மதுரை செல்லுார் கண்மாயில் நீர்நிலைகள்பாதுகாப்பு இயக்கம் சார்பில் பஞ்சபூதங்களுக்கு பொங்கல் படையலிடப்பட்டது. நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் தனராஜ், சம்சுதீன், கண்ணன் முன்னிலை வகித்தனர். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம், உதவும் உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் ஜமாலுதீன், வைகை நதி மக்கள் இயக்க ஒங்கிணைப்பாளர் ராஜன், களம் அமைப்பு நிர்வாகி வரதராஜன், மண்ணின் மைந்தர்கள் நிர்வாகி அழகுராஜா, வழிகாட்டி மனிதர்கள் நிறுவனர் மணிகண்டன், சமூகஆர்வலர் அசோக்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி பாலமுருகன் நன்றி கூறினார்.