லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி வழிபாடு
ADDED :4879 days ago
விழுப்புரம் : பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 7.30 மணிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், நரசிம்மஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு வசுத்தாராஹோமம், 12.45 மணிக்கு கலசதீர்த்தம், மூலவருக்கு அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பத்ராசலம், அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.