உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சேலம்: சேலம், சஞ்சீவிராயன்பேட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் விஸேஷசந்தி, பூதஸூத்தி, கணபதி பூஜை, புண்யாஹவசனம், சிவசூர்ய பூஜை, த்வார, தோரண பூஜைகள் நடந்தன. மருதாசல அடிகளார், சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. மூன்றாம் கால யாக பூஜை, லட்சுமி, கணபதி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.30 மணிக்குள் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.விழா ஏற்பாட்டை கோவில் நிர்வாகக்குழு தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் நடேசன், செயலாளர் வெங்கட்ராஜ், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !