நாவை அடக்குங்கள்
ADDED :1737 days ago
வயிறு புடைக்க சாப்பிட்ட பிறகும் கடையில் தயாராகும் பலகாரத்தை பார்த்தால் மனம் ஆசைப்படுகிறது. நாக்கை அடக்க முடிய வில்லை. ருசிக்காக மட்டுமல்ல சில சமயங்களில் நாக்கு இன்னும் நீள்கிறது. மற்றவரை புறம் பேசுகிறது. பொய் பேசுகிறது. அபாண்டமாக பழி சுமத்துகிறது. அலட்சியப்படுத்துகிறது. சுமத்துவது என செய்யும் சேட்டைகள் கொஞ்சமல்ல. நாக்கை கடுமையாக பைபிள் கண்டிக்கிறது.
* நாக்கு ஒரு நெருப்பு. அது அக்கிரமங்கள் அனைத்தும் நிறைந்தது
* பொல்லாத நாக்கு பூமியில் நிலைப்பதில்லை. அதை அடக்க எவனாலும் முடிவதில்லை.
* தீமை, விஷம் நிறைந்தது நாக்கு.
இவ்வளவு தெரிந்தும் நாம் நாக்கை கட்டுப்படுத்த வேண்டாமா