உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா

நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்துாரி விழாவில், நேற்று சந்தனம் பூசும் விழா நடந்தது.நாகை அடுத்த நாகூர் சாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில், 464ம் ஆண்டு கந்துாரி விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை, தர்கா சன்னிதானத்தில் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாகை அபிராமி அம்மன் கோவிலில் இருந்து, சந்தனக் கூடு ஊர்வலம் துவங்கியது.மங்கள வாத்தியங்கள் முழங்க, நேற்று அதிகாலை நாகூர் வந்த சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகளில் வலம் வந்து, காலை, 4:30 மணியளவில், தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின், சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !