ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 வகை மூலிகை அபிஷேகம்
ADDED :1720 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 வகையான மூலிகை அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த இந்த
அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிஅம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.