உபநிஷதம் சொல்லும் உண்மை
ADDED :1829 days ago
சிறுவன் நரேந்திரனின் மனதில் இரு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதித்து வாழ்வது. மற்றொன்று துறவியாக ஆன்மிகத்தில் ஈடுபடுவது. இளைஞனாக வளர்ந்த நரேந்திரன், இரண்டாவதான ஆன்மிக வாழ்வைத் தேர்ந்தெடுத்து ‘விவேகானந்தர்’ என்னும் துறவியாக மாறினார்.
இரண்டுமே நன்மைக்கான வழி தான் என்றாலும், உலகியல் வாழ்வில் மனிதனுக்கு கிடைக்கும் சந்தோஷம் தற்காலிகமானது. கடவுளை அறியும் ஆன்மிக இன்பம் நிரந்தரமானது. நம் அனைவரின் மனதிலும் இந்த இரண்டும் வந்து நிழலாடுகின்றன. விவேகம் உள்ளவன் ‘சிரேயஸ்’ என்னும் ஆன்மிக வாழ்வையும், சாமானிய மனிதன் ‘பிரேயஸ்’ என்னும் உலக வாழ்வையும் தேர்ந்தெடுக்கிறான் என்கிறது கடோபநிஷதம்.