தைப்பூச விழா: வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1875 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சண்முகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சண்முகப் பெருமானுக்கு காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, கலசாபிஷேகம் நடந்தது. வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமான் விபூதி மற்றும் வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.