துர்க்கையம்மன் கோவிலில் நவசண்டி மஹாயாகம்
ADDED :1752 days ago
கிருஷ்ணகிரி: முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில், நவசண்டி மஹாயாகம் நடந்தது. கிருஷ்ணகிரி, போலீஸ் குடியிருப்பில் உள்ள, முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில், நேற்று நவசண்டி மஹாயாகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை கோ பூஜை, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், சண்டி பாராயணம் புனர்பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நவசண்டி மஹாயாகம் ஆகியவை நடந்தது. பகல், 12:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.