உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் கும்மி அடித்து தைப்பூச விழா கொண்டாட்டம்

பெண்கள் கும்மி அடித்து தைப்பூச விழா கொண்டாட்டம்

உடுமலை: உடுமலை, போடிபட்டி குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் ஒன்றுகூடி தைப்பூச திருவிழா கொண்டாடினர்.போடிபட்டி ஊராட்சி, ஆர்.வி., நகர், சரவணா கார்டன் பகுதியில், 30க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.குடியிருப்பு பகுதி மக்கள் ஒன்றுகூடி, கோலமிட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், கும்மி அடித்தும், கிராமிய பாடல்கள் பாடியும், விழாவை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !