உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜை

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச சிறப்பு பூஜை

 திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சண்முகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சண்முகப் பெருமானுக்கு காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, கலசாபிஷேகம் நடந்தது.வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமான் விபூதி மற்றும் வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தைப்பூச பவுர்ணமி வழிபாடு நடந்தது. உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. உள்பிரகாரம் புறப்பாடு செய்யப்பட்டு மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.பகவத் சங்கல்பம், சாற்றுமுறை சேவை பூஜைகள் செய்து வைக்கப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். இதில், பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !