உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தைப்பூச விழா: தெப்போற்ஸவம் கோலாகலம்

பழநியில் தைப்பூச விழா: தெப்போற்ஸவம் கோலாகலம்

 பழநி: தைப்பூச விழா நிறைவு நாளை முன்னிட்டு தெப்போற்ஸவம் கோலாகலமாக நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,22ல் துவங்கி ஜன.,31 வரை நடக்கிறது. ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், மலர்காவடி, மயில்காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் ரதவீதியில் புறப்பாடு நடந்தது. விழாவில் இன்று (  ஜன.,31 ) இரவு 7:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்போற்ஸவம் நடைபெற்றது. இரவு 11:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !