உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் தீர்த்தத்தில் நீராட அனுமதி

ராமேஸ்வரம் தீர்த்தத்தில் நீராட அனுமதி

ராமேஸ்வரம் : 10 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் புனித நீராட தமிழக அரசு அனுமதி வழங்கியதால்,பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊரடங்கு தளர்வால் செப்.,1 முதல் தமிழகத்தில்அனைத்து கோயில்களும் திறந்தாலும், தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதித்த நிலையில், கோயிலுக்குள்உள்ள 22 தீர்த்தத்தில் நீராட தடை விதித்தனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் குறைந்தது.தீர்த்த கிணறுகளை திறக்க பலதரப்பினரும் வலியுறுத்தியதால், நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயிலில் தீர்த்தம் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ராமேஸ்வரம் கோயிலில்நீராடும் பக்தருக்கு கொரோனா பரவாமல் இருக்க, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பர். இதன்பின் ஓரிரு தினங்களுக்கு பின் தீர்த்தம் திறந்து பக்தர்கள் நீராட அனுமதிக்கப் படுவர். 10 மாதத்திற்கு பின் தீர்த்தம் திறந்து நீராட உள்ளதால் பக்தர்கள், இந்து அமைப்பினர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !