இன்று முதல் கோயில்களில் நீராட அனுமதி
ADDED :1753 days ago
அழகர்கோவில் : கொரோனா ஊரடங்கால் கோயில்களில் புனித நீராட தடைவிதிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று(பிப்.,1) முதல் புனித நீராட பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபகோயிலான ராக்காயி அம்மன் கோயில் தீர்த்தம் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.