உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நிதி சேகரிப்பு துவக்கம்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நிதி சேகரிப்பு துவக்கம்

 தேனி : தேனியில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில், அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நிதி சேகரிப்பு துவக்க விழா அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்தது.

ஹிந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். பாரதிய மஸ்துார் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலன் வரவேற்றார். இதிகாச சஞ்சலன் அமைப்பின் மாநில நிர்வாகி சுப்பிரமணியன் நிதி வழங்கி துவக்கி வைத்தார். கோயில் செயலாளர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார். பா.ஜ., தேனி நகரச் செயலாளர் விஜயக்குமார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கார்த்தி நிர்வாகிகள் பங்கேற்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார். மாவட்டத்தில் ஜன., 31 முதல் பிப்., 28 வரை ராமர் கோயில் கட்டுமானத்திற்கான காணிக்கை நிதி பொதுமக்கள் வழங்கலாம் என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !