சங்கடஹரசதுர்த்தி பூஜை
ADDED :1965 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர்கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தொண்டி இரட்டை பிள்ளையார்,பாரதிநகர் கற்பகவிநாயகர், தாலுகா அலுவலகம் முன்புள்ள அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும்பிரசாதம் வழங்கப்பட்டது.