விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1753 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
விருத்தாசலத்தில் இருந்து சமயபுரம் யாத்திரை செல்லும் பக்தர்கள், மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யாத்திரை செல்லும் பெண் பக்தர்கள், பகல் 12:00 மணியளவில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு, ஜெகமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், விருத்தாம்பிகை அம்மன் சன்னதி முன் மண் சோறு சாப்பிடும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.