உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம், கண்ணகி நகர், ராஜராஜன் நகர், செல்வ விநாயகர், சக்தி மாரியம்மன், சிவசக்தி ஈஸ்வரன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்கள் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த, 22ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்றுமுன்தினம் கணபதி பூஜை, காவிரி ஆற்றிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், யானை, குதிரைகள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று கோபுர கலசத்தின் மேல், சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை காண வந்த பொதுமக்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. சக்தி மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !