உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம நாராயண அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

பிரம்ம நாராயண அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

 புதுச்சேரி; ஏம்பலம் பூரணி பொற்கலை உடனுறை பிரம்ம நாராயண அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.நெட்டப்பாக்கம், கொம்யூன் ஏம்பலம் பகுதியில் பூரணி பொற்கலை உடனுறை பிரம்ம நாராயண அய்யனாரப்பன், தேச மாரியம்மன் மற்றும் கங்கையம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.


நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, 8:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது.காலை 9:10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கங்கையம்மன், தேச மாரியம்மன், அய்யனாரப்பன் கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் திருகல்யாண உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கோவிந்தராசு தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !