உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

பொங்கலுார்:பொங்கலுார் ஸ்ரீ சவுந்தர நாயகி உடனமர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஸ்ரீ நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 1ல் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்ணாகுதி, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்கள், சிவாலய தெய்வங்கள் மற்றும் நீலகண்டி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை கல்யாணபுரி ஆதீனம், 57ம் குருமஹா சன்னிதானம் சரவணமாணிக்கவாசக சுவாமி, கோவை கூனம்பட்டி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.விழாவையொட்டி, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நீலகண்டியம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !