அறியாமை கூடாது
ADDED :1959 days ago
ஒரு செயலில் ஈடுபடும் போது அது பற்றிய தெளிவு அவசியம். நாயகத்தின் அறிவுரைகளை கேட்பதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாறு, குணநலன்கள் பற்றிய தெளிவு நமக்கு வேண்டும். இறைவனை தொழுவதாக இருந்தால் அவனது பெருமை பற்றி அறிந்திருக்க வேண்டும். அறியாமையோடு செய்யும் தொழுகையில் இறைவனை எவ்வளவு புகழ்ந்தாலும் நன்மையை விட தீமை அதிகம் ஏற்படும். அறியாமையை விட கொடிய வறுமை வேறில்லை.