தீங்கு செய்தாலும் நன்மை
ADDED :1856 days ago
யூதப்பெண் ஒருத்தி தினமும் அதிகாலையில் வீட்டு மாடியில் குப்பை கூடையுடன் காத்திருப்பாள். எதற்காக தெரியுமா? தொழுகை முடித்து வரும் நாயகத்தின் தலையில் கொட்டுவதற்காக. அவரும் கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக போய் விடுவார். இப்படியே தினமும் நடந்தது. ஒருநாள் தொழுகை முடித்து வந்த போது அப்பெண்ணைக் காணவில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். காய்ச்சலால் அவள் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
உடனே பார்க்கச் சென்றார் நாயகம். அந்த பெண் படுக்கையை விட்டு எழ முயன்றாள்.
‘‘வேண்டாம் அம்மா... ஓய்வு எடுங்கள்’’ என்றார்.
குணம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டினார். கண் கலங்கிய அவள் மன்னிப்பு கேட்டாள்.
தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வதே உயர்ந்த பண்பு.