வரதராஜபெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :1752 days ago
திருப்பூர்: கோவில்வழியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரும்பண்ணை வரதராஜபெருமாள் கோவில் ஆண்டு விழா, கடந்த 2ம் தேதி, சுதர்ஷன ேஹாமத்துடன் நடந்தது. தொடர்ந்து, ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.பெருந்தேவி தாயார் திருவிளக்கு வழிபாட்டுக்குழுவினர், கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டி, நேற்று குத்துவிளக்கு வழிபாடு நடத்தினர். கோவிந்தராஜ பட்டர் தலைமையில், ஆகம விதிமுறைப்படி குத்துவிளக்கு பூஜை நடந்தது.இரண்டு திருவிளக்குகளில், தீபலட்சுமி நாராயணர், தீபலட்சுமி ஆவாஹணம் செய்து, விநாயகர் வழிபாட்டுடன் குத்துவிளக்கு வழிபாடு துவங்கியது. பெண்கள் பங்கேற்று, உலக நலன் வேண்டியும், திருப்பூர் தொழில்நலன் வேண்டியும் கூட்டு பஜனை செய்தனர்.