உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் விமர்சியாக நடந்தது. பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரம் சுவாமி மயில், சேவல் ,ஆட்டுக்கிடா, யானை, சிங்கம், பூதம் உள்ளிட்ட வாகனங்களில் நகர்வலம் வருதல் நடந்தது. நேற்று சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக சூரை தேங்காயை உடைத்தனர். பக்தர்கள் பறவைக் காவடி எடுத்தல், தீர்த்தம் எடுத்து வருதல் ஆகியன நடந்தது. மாலையில் பிரம்மாண்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை பழநி கோயில் அறநிலையத் துறையினர் செய்திருந்தனர் . ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !