கண்டதேவி கோயில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி மனு
ADDED :1747 days ago
மதுரை : சிவகங்கை மாவட்டம் கண்டதேவி செந்தில்நாதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கண்டதேவியில் முத்துமாரி அம்மன் கோயில் உள்ளது. மரியாதை சர்ச்சை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு அறநிலையத்துறையிடம் நிலுவையில் உள்ளது.குழு அமைத்து கோயில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு சிவகங்கை கலெக்டர், அறநிலையத்துறை இணைக்கமிஷனர், தேவகோட்டை ஆர்.டி.ஓ.,விற்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.,22க்கு ஒத்திவைத்தது.