ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
ADDED :1747 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யவும், முக கவசம் அணியவும், கிருமி நாசினி மருந்து பயன்படுத்திடவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.