உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.175 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு

ரூ.175 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் : திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 175 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,252 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என, ஹிந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:திருப்பூர் இணை கமிஷனர் மண்டலத்துக்கு உட்பட்டு, 2,041 கோவில்கள் உள்ளன. ஒருகால பூஜை திட்டத்தில், 753 கோவில்கள் உள்ளன; 43 கோவில்களில் அன்னதானம் நடந்து வருகிறது. 2011 முதல் தற்போது வரை, 21 கோடி ரூபாய் மதிப்பில், 850 கோவில்களில் திருப்பணி நடந்துள்ளது. திருப்பூரில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,006 ஏக்கர்; கரூர் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 246 ஏக்கர் என, 175 கோடி ரூபாய் மதிப்பில், 1,252 ஏக்கர் நிலமும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !